suseendharn comment the vishal

நடிகர் சசிக்குமாரின் உறவினரும், அவருடைய நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டு உயிர் இழந்தார். 

இவருடைய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய மரணத்திற்கு காரணமாக இருக்கும் அன்புச்செழியன் என்கிற கந்து வட்டிக்காரர் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில், நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும், என்றும் கந்துவட்டி காரர்கள் தமிழ் சினிமாவில் இருந்து ஓடிவிடுங்கள்" என பல மிரட்டலான வார்த்தைகளை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அசோக் சாவுக்கு காரணமாக இருந்த கந்துவட்டிக்காரர் அன்புவின் பெயரை மாட்டு அவர் அறிக்கையில் ஒரு இடத்தில கூட குறிப்பிடவில்லை என்று கூறி இயக்குனர் சுசீந்தர தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

இது விஷாலை பார்த்து "பெயரை குறிப்பிடவே பயப்படுகிறீர்கள், நீங்கள் எப்படி தயாரிப்பாளர்கள் பிரச்னையை தீர்க்க போகிறீர்கள்" என மறைமுகமாக சுசீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளதை காட்டுகிறது. 

Scroll to load tweet…