தமிழில் கதை சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நூற்றுக்கணக்கானோர் காத்திருக்க, தெலுங்குப் பட இயக்குநர் ஒருவரிடம் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு இறங்கி தனக்கு ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கேட்டிருக்கிறார் நடிகர் சூர்யா.

தற்போது தனி மெஜாரிட்டி பெற்று ஆந்திராவில் ஆட்சி அமைக்கும் ஜெகன்மோகன்ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து மஹி வி ராகவ் என்கிற புதுமுக இயக்குநர் ‘யாத்ரா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். ஒய் எஸ் ஆர் பாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்த அப்படம் இரு மாதங்களுக்கு முன் ரிலீஸாகி  ஆந்திரா முழுக்க சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்நிலையில் இயக்குநர் மஹி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மிக விரைவில் யாத்ராவின் தொடர்ச்சியாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக இயக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் அப்பேட்டியில் ஜெகன் மோகன் ரெட்டியின் பாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்த விபரங்கள் எதையும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இயக்குநர் மஹியின் யாத்ரா 2’ குறித்து மிக ஆர்வம் காட்டிய சூர்யா, இயக்குநர் விரும்பினால் ஜெகன் மோகன் ரெட்டி அண்ணனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கத்தயாராக இருக்கிறேன்’ என்று மிக ஆர்வமாக வாய்ப்புக் கேட்டிருக்கிறார். சூர்யாவின் ஆர்வத்தை இயக்குநர் மஹியும் அண்ணா ஜெகன்மோகன் ரெட்டியும் பரிசீலிப்பார்களா?

பின்குறிப்பு: தற்போதைய ஆந்திர முதல்வரின் மனைவி பெயரில் உள்ள பாரதி சிமெண்ட்ஸ்க்கு நடிகர் சூர்யா விளம்பர தூதராக இருந்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.