கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. எப்போதும் தன்னுடைய ரசிகர்கள் மீது தனி அக்கறைக் கொண்ட இவர், இதனை பல சமயங்களில் நிரூபித்தும் உள்ளார்.

அந்த வகையில், தற்போது இவரை பற்றி இவருடைய ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல், சூர்யா ரசிகர்களின் அன்பிற்கு தகுதியானவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 

சமீபத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த அவரது தீவிர ரசிகர் ஒருவர், சூர்யாவிற்கு சட்டை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த சட்டையை சூர்யா அணிவாரா? என்ற சந்தேகமும் அந்த ரசிகருக்கு இருந்த நிலையில், அந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வெளியில் சென்ற போது சூர்யா ரசிகர் கொடுத்த சட்டையை அணிந்து சென்றுள்ளார். 

தற்போது ரசிகர் அன்புடன் கொடுத்த சட்டை அணிந்தவாறு வெளியான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர் கொடுத்த சட்டையில் தரத்தை பற்றி கவலைப்படாமல் அந்த ரசிகரின் உண்மையான அன்புக்கு மதிப்பளிக்கும் விதத்தில் சூர்யா நடந்துக்கொண்டுள்ளதால் சூர்யாவை பலர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.