surya talk about height issue

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த மூத்த நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா, இன்று கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அஜித், விஜயை தொடர்ந்து தனக்கென மிக பெரிய ரசிகர்கூட்டத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் உயரம் குறித்து பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இரண்டு பேர் நேரடி நிகழ்ச்சியில் கிண்டலடித்த விவகாரம் தற்போது காட்டு தீ போல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. 

இந்த தொகுப்பாளினிகளின் பேச்சுக்கு, ரசிகர்கள் மட்டும் இன்றி பல திரை பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த பிரச்சனை குறித்து நடிகர் சூர்யா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது முதல் முறையாக இந்த விவகாரம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா..." தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என பதிவு செய்துள்ளார்.

மேலும் இன்று சூரியாவின் ரசிகர்கள் சன்டிவி முன்பு ஒன்று திரண்டு, தரம் தாழ்ந்து பேசிய தொகுப்பாளினிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…