தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் 2000 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டு போட்டியை நடத்த கடந்த 2014ம் ஆண்டு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு போட்டி  தமிழகத்தில் நடைபெறவேண்டும் என பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது

200 வகையான காளைகள் இருந்த நம் நாட்டில், இப்போது 30 வகைகள்கூட இல்லை என்கிறார்கள்.

அவை அப்படியே அழிந்து கொண்டிருக்கின்றன; அவற்றை எப்படி நாம் பராமரிக்கப் போகிறோம் என்பதுதான் எனது முதல் கேள்வியாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது நமது கலாச்சாரத்தோடு, அடையாளத்தோடு கலந்த ஒரு விஷயம். அதை தடை செய்யக்கூடாது என்பது என் கருத்து என்றார்.