Asianet News TamilAsianet News Tamil

’பெண்ணின் உடலை வைத்து சமூகம் ஆடும் கேவலமான விளையாட்டு தான் இந்த பொள்ளாச்சி வீடியோ’...நடிகர் சூர்யா...

’குடும்பமும் சமூகமும் பெண்களின்  உடலை வைத்து அவர்கள்  பலவீனமாக வளர்க்கப்படுவதை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்’ என்கிறார் நடிகர் சூர்யா.

surya statement regarding pollachi incident
Author
Chennai, First Published Mar 14, 2019, 1:58 PM IST

’குடும்பமும் சமூகமும் பெண்களின்  உடலை வைத்து அவர்கள்  பலவீனமாக வளர்க்கப்படுவதை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்’ என்கிறார் நடிகர் சூர்யா.surya statement regarding pollachi incident

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,.. பொள்ளாச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்கள் வெளியானதும், அந்தப் பெண்ணின் குடும்பம் மிரட்டப்பட்டதும் நம்முடைய அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுவாக இரு விதமான எதிர்வினைகள் வருகின்றன. ஒன்று ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா என்கிறது ஒரு கூட்டம். மற்றொன்று அறிமுகம் இல்லாத ஆண்களை நம்பாதீர்கள் என்கிறது மற்றொரு கூட்டம். பெண்கள் மீதான அன்பு, வெறுப்பு இந்த இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான். ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள்….நீங்கள் ஒதுங்கிவிடுங்கள் என்பதே அதன் அர்த்தம். surya statement regarding pollachi incident
பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டும் ஆண்களை பெண்களின் குடும்பத்தினர், உன்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய அவனை பொது வெளியில் வைத்து அசிங்கப்படுத்து. சிறைக்கு அனுப்பு. நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என்று குடும்பம் சொன்னால், இந்த மிரட்டல் ஒரு போதும் பலிக்காது. குடும்பத்தாலும், சமூகத்தாலும் தனது உடலை வைத்து பலவீனமாக வளர்க்கப்படுவதை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். 

பெண்ணின் உடலை வைத்து இந்த சமூகம் ஆடும் கேவலமான விளையாட்டு தான் இந்த பொள்ளாச்சி வீடியோ.குடும்பத்தாலும், சமூகத்தாலும் தனது உடலை வைத்து பலவீனமாக வளர்க்கப்படுவதை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.  பாதிக்கப்பட்ட பெண் வசதியானவராக இருந்தால் அவரிடம் இருந்து பணம் பறிப்பதும், அவர்களிடம் இருந்து காரியம் சாதித்துக் கொள்ளவும் தான் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்தக் குற்றத்தில் உள்ளவர்களை தொழில்முறை குற்றவாளிகளாக பார்க்க வேண்டும். 

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். துணிந்து நின்று அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும். எனது உடலை வைத்து நீ என்னை பணியச் செய்ய முடியாது என்று பெண்கள் பெண்கள் துணிந்து இருப்பது அனைவரின் கடமை. பெண்களுக்கு எதிராக இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்கொடுமை தான் பாலியல் வன்கொடுமையை விட மிகவும் ஆபத்தானது.surya statement regarding pollachi incident

இவ்வளவு ஏன், என்னுடைய மகன், மகளை ஒரே விதமாகத்தான் நான் வளர்க்கிறேனா என்ற கேள்வி எனக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பெண் குழந்தையின் உடையில் எனக்கு நிறைய விதிமுறைகள் இருக்கிறது. நீ எப்படி உடுத்த வேண்டும், நீ எப்படி உட்கார வேண்டும், மற்றவர்கள் பார்வைக்கு உன்னை எப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்பது பற்றி சமூகம் எனக்கு கற்று கொடுத்தவற்றை நான் எனது பிள்ளைக்கு அறிவுரையாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன்’ என்று ஆதங்கப்படுகிறார் சூர்யா.

Follow Us:
Download App:
  • android
  • ios