'இறுதிச்சுற்று' புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், மாறா என்ற கேரக்டரில் சூர்யா நடிக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இதையும் படிங்க: மாலத்தீவில் மல்லாக்க படுத்து ஹாட் போஸ்... தொப்பியை கழற்றியும் அங்கங்களை மறைக்க முயலாத பிரபல நடிகை..!

படத்தின் டிசரைப் பார்த்து ரசிகர்கள் ஏற்கனவே மிரண்டு போயுள்ள நிலையில், சூர்யா பாடியுள்ள மாறா தீம் சாங் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்ற அறிவிக்கப்பட்ட மாறா தீம் பாடல், 15 நிமிடங்கள் தாமதமாக வெளியிடப்பட்டது. முதலில் சூர்யா பாடலை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணமோ பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

இப்ப வந்து மோதுடா.... கிட்ட வந்து பாருடா என ஆரம்பிக்கும் அந்த பாடல், சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இசையில் ஜி.வி.பிரகாஷ் வேற லெவலுக்கு பொறி பறக்க வைத்துள்ளார். சூர்யா குரலில் பாட்டை கேட்டாலே சும்மா அதிருது.