விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Vijay Sethupathi Son Surya Sethupathi
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது இந்திய மொழிகளில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். தற்போது இவரது மகன் சூர்யா சேதுபதி ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
படத்தில் பணியாற்றியுள்ள கலைஞர்கள்
இந்த படத்தை அனல் அரசு இயக்கியுள்ளார். பிரேவ் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் அனல் அரசு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் சூர்யா சேதுபதி பாக்சராக நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார் மற்றும் ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார்.
‘பீனிக்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று “இந்தா வாங்கிக்கோ..” என்கிற குத்து பாடலை விஜய்சேதுபதி வெளியிட்டு இருந்தார். தற்போது படம் ஜூலை 4ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
