surya sai pallavi movie is started today
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்கியது
எப்போதும் தரமான படங்களைத் தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த 2018 புத்தாண்டு அன்று சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் 36 திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது .

மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் புத்தாண்டான இன்று துவங்கியது .வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் .ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் S.R.பிரகாஷ் , S.R.பிரபு இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
