Asianet News TamilAsianet News Tamil

நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா..!

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் இயக்கத்தியும் பாராட்டி வருகின்றனர். 
 

surya replay to director vasanth
Author
Chennai, First Published Nov 19, 2020, 7:36 PM IST

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு சுதாகொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இதில் கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார் என பலரும் சூர்யாவின் நடிப்பையும், சுதாவின் இயக்கத்தியும் பாராட்டி வருகின்றனர். 

மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். சூர்யாவிற்கு இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறிவருகின்றனர். 

surya replay to director vasanth

இந்நிலையில் சூர்யாவை தனது நேருக்கு நேர் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் வசந்த், சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு சூர்யாவிற்கு பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாராட்டு கடிதம் உனக்கு இல்லை.. நெடுமாறன் இராஜாங்கத்திற்கு , முதல் FRAME இல் இருந்து ROLLING TITLE ஒடுகிற கடைசி FRAME வரை உன் ஆட்சிதான். FRAME க்கு FRAME, SCENE க்கு SCENE உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த்திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இது இதுதான் உன் உச்சம் நெடுமாறன் இராஜாங்கமாக நீ நடிக்கவே சமி இப்போதைக்கு இல்லை இரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

surya replay to director vasanth

முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிக்கிறது கணல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்க்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு, எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய். உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்கிறேன் HATS OFF TO YOU MY DEAR SURYA என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும் ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என உச்சி முகந்து உச்சி முகந்து மகிழ்கிறேன் என மெய்சிலிர்ந்து பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் வசந்த்.

surya replay to director vasanth

இந்த அறிக்கைக்கு, தற்போது சூர்யா, உங்க பாராட்டு அவ்ளோ சந்தோஷம் தருது சார்..!!! நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி   சார் என தெரிவித்துள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios