Surya plays the role of Miss South India This is a meeting that belongs to ...

சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தற்போது இந்திய அழகி ஒருவர் இணைந்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்‘.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இவர்களோடு இந்த படத்டில் கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த மாடல் அழகியான மீரா மிதுனும் இணைந்துள்ளார்.

‘மிஸ் சௌத் இந்தியா’ பட்டம் வென்ற இவர், ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.