Surya played the racla racing with son
கடைக்குட்டி சிங்கம் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டை தனது மகனுடன் கண்டு களித்துள்ளார் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம்
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு தற்போது கார்த்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் ப்ரியா பவானிஷங்கர், சாயிஷா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கின்றனர். அத்துடன் சத்யராஜ், சூரி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
டைட்டில் போஸ்டர்
இந்நிலையில், கடைக்குட்டி சிங்கம் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதில் விவசாயியாக கார்த்தி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மகனுடன் சூர்யா
மேலும், தனது மகன் தேவுடன் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ரேக்ளா பந்தயத்தை கண்டு ரசித்த வீடியோவையும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக சென்னை அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #kadaikuttysingam இடம்பிடித்துள்ளது.
