நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்து நடித்துள்ள திரைப்படம் 'NGK ' இந்த படத்தில்,  ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

மன்சூரலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் சூர்யா ரசிகர்கள் மத்தியில்,படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது.  இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில், 'NGK ' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில்,  முதல் நாள் காட்சியின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது தெரியவந்துள்ளது. முதல் நாளே மிகப்பெரிய அளவில் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.