Surya Jyothikas Daughter Diya Son Dev School Stage Performance stills
நட்சத்திர தம்பதிகளான சூர்யா-ஜோதிகா நடிப்பில் மாஸ் காட்டுவார்கள், சிங்கம் சந்திரமுகிகளின் வாரிசான மகள் தியா, மகன் தேவ் ஆகியோரும் இந்த சின்ன வயசிலேயே நடிப்பில் செம கியூட்ன்னு சொன்ன நம்பமுடியுதா? நம்பித்தான் ஆகணும்

சமீபத்தில் பாடகி ஷாலினி குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார். இதில் சூர்யாவின் குழந்தைகள் 2 பேரும் நடித்து அரங்கத்தில் உள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், சூர்யா மகன் தேவ் மேடை நடிகருடன் வாள் ஏந்தி சண்டை போடும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.
.jpg)
அதே போல, மகள் தியா மேடை நாடகத்தில் நடித்த புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இருவரும் முக பாவனைகளையும், உடல் அசைவுகளையும் அருமையாக வெளிப்படுத்தி அனைவரும் உற்சாகமூட்டியிருக்கிரார்கள்.
இந்த வீடியோ, புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சூர்யா ரசிகர்கள் தியா, தேவ் நடித்த வீடியோவையும் புகைப் படங்களையும் இணைய தளங்களில் பதிவிட்டு வாழ்த்துகளைக் கூறி சிங்கத்துக்கு, பிறந்தது சிங்கங்கள்தான் என கொண்டாடி வருகின்றனர்.
