surya jothika fight reson is vijaysethupathy
தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் குழந்தைகள் பிறந்தும் கூட தங்களுடைய காதலை அவ்வப்போது நிகழ்ச்சி மேடைகளில் வெளிப்படுத்தி வருவது தான் இவர்களுடைய ஸ்பெஷல்.
சூர்யா தன்னுடைய மனைவி ஆசைப்பட்டதற்காக 36 வயதினிலே படத்தை தயாரித்து மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் ஜோதிகா ரீ என்ட்ரி ஆக வைத்தார். இந்தப் படம் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, மற்றும் பானுப்பிரியா நடித்து வெளிவந்த மகளிர் மட்டும் திரைப்படமும் பெண்கள் மத்தியில் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்து வரும் ஜோதிகா, கடந்த சில தினங்களுக்கு முன் வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் எனக் கேட்டார்.

இதற்கு பதில் பதில் அளித்த ஜோதிகா சூர்யாவிற்கு பிறகு தன்னை மிகவும் கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி என பதில் கொடுத்துள்ளார். இப்போது இந்த பதில் தான் சூர்யா குடும்பத்தில் பூகம்பமாக வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கேள்விப்பட்ட கார்த்தி, அண்ணி ஜோதிகா தன்னை எப்போதும் உற்சாகப் படுத்துவது போல் பேசுவார். தற்போது ரசிகர்கள் கேட்க்கும் போது தன்னுடைய பெயரை அவர் கூறாமல் விஜய் சேதுபதி பெயரை மட்டும் கூறியுள்ளார் என தன்னுடைய மனைவி மற்றும் பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டாராம்.

இதனால் ஜோதிகா மேல் சூர்யா குடும்பத்தினர் சற்றே மனஸ்தாபத்தில் உள்ளார்களாம். மேலும் ஜோதிகா, மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதியோடு இணைத்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
