surya jothika children acting in drama in the stage
பட்டய கிளப்பும் சூர்யா-ஜோதிகா பசங்க...! நடிக்க தயாராகிட்டாங்க...ரிகர்சல் ஓவர்..!
கோலிவுட் திரை உலகில் ஒரு அழகிய நட்சத்திர குடும்பமாக திகழும் குடும்பம் நடிகர் சிவகுமார் குடும்பம்.
சிவகுமாரின் பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், சூர்யா ஜோதிகாவின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ் தற்போது ஒரு நாடக மேடையில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளனர்
பாடகி ஷாலினி சமீபத்தில் குழந்தைகளுக்கான மேடை நிகழ்ச்சி நடத்தினார்.அதில் நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகன் மற்றும் மகள் அசத்தலாக நடித்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில்,சூர்யா மகன் தேவ் சண்டை காட்சியில் நடித்த போட்டோ வெளியாகி உள்ளது.
அதே போன்று,தியா மேடை நாடகத்தில் நடித்த போட்டோவும் வெளிவந்துள்ளது.

இவர்கள் இருவரின் போட்டோவையும் பார்த்து,ரசிகர்கள் பெரும் ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
