நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டுள்ள நிலையில், 'சூர்யா 40 ' படத்தில் அவர் கலந்து கொள்ள உள்ள தகவல் குறித்து தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டுள்ள நிலையில், 'சூர்யா 40 ' படத்தில் அவர் கலந்து கொள்ள உள்ள தகவல் குறித்து தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கொரோனா தொற்று ஏற்பட்டது சிகிச்சை பெற்று வருவதாக பிப்ரவரி 7 ஆம் தேதி, ட்விட்டர் மூலம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதுகுறித்து சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,‘கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, உரிய சிகிச்சைக்கு பின் தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நடிகர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான '40 'ஆவது படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள தயாராகியுள்ளார்.
தற்போது அவரது உடல் முழுமையாக குணமடைந்து விட்டதால், சூர்யா வரும் திங்கள் கிழமை முதல் 'சூர்யா 40 ' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில், இதுகுறித்து ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து சமீபத்தில் மீண்டு வந்த சூர்யா, விரைவில் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கட்ட நிலையில் திங்கள் கிழமை முதல் கலந்து கொள்ள உள்ளார்.
