surya issue nadigarsangam give the notice for sun tv

சமீபத்தில், சன் டிவி நிறுவனத்தில் பணியாற்றும் தொகுப்பாளினிகள் இருவர் நடிகர் சூரியாவின் உயரம் குறித்து நேரடி நிகழ்ச்சியில் விமர்சித்தனர். இவர்களுடைய பேச்சு சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இவர்களை கண்டிக்கும் வகையில், நேற்றைய தினம் ரசிகர்கள் அனைவரும் திரண்டு சன் தொலைக்காட்சி முன்பு போராட்டதில் இடுபட்டனர்.

நடிகர்கள் கருத்து:

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தனித்தனியாக விக்னேஷ் சிவன், ஞானவேல் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

நடிகர் சங்கம் நோட்டீஸ்:

தற்போது நடிகர் சங்கம் சார்பாக சன் டிவிக்கு நோடீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தில் மூத்த உறுப்பினரை அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அந்த நோட்டீசில் குறிபிடப்பட்டுள்ளது.

நோட்டீசில் கூறியுள்ளது:

சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் சூர்யாவின் உருவ அமைப்புப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது

தனிப்பட்ட ஒருவரை பற்றி இதுபோன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.