சூர்யாவை பற்றி மனம் திறந்த ஜோதிகா...! அதில் அவர் தான்  பெஸ்ட்டாம்..!

நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிகள் என்றாலே கோலிவுட்டில் மிக சிறந்த  ஜோடிகள் தான் என்பார்கள்..

நடிகை ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்துக்கொண்ட பின் சில ஆண்டு காலமாக அவர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார்

இந்நிலையில், மீண்டும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்  ஜோதிகா. குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார் ஜோதிகா.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜோதிகா....

எனக்கு வரும் பட வாய்ப்பை பொறுத்த வரையில் 36 வயதினிலே  படத்திற்கு பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து தான், மகளிர் மட்டும்  படம் நடித்தேன்.

அதன் பிறகு தான் மற்ற படங்கள் வரிசையாக வர தொடங்கியது என  அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருந்தால் தான் நடிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்

குழந்தைகளை விட்டுவிட்டு நான் நடிக்க வந்துள்ளேன். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக்  இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

குழந்தை வளர்ப்பதில், அதிக கவனம் செலுத்துவது என்னை விட பெஸ்ட்  சூர்யா தான் என அவர் தெரிவித்து உள்ளார்

குழந்தைகள் அவர்கள் இஷ்டத்துக்கு விட வேண்டும் என செல்லம்  கொடுப்பார்..ஆனால் நான் கொஞ்சம் கண்டிப்பான அம்மா தான் எனவும் தெரிவித்து உள்ளார் ஜோதிகா.