Surya has done the next film with the film director ...

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நடிகர் சூர்யா உறுதி செய்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் ஆகியோரது நடிப்பில் வந்த மாபெரும் வெற்றிப் படம் இறுதிச்சுற்று.

குத்துச்ச ண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் மாதவனுக்கு தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தது.

இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த சுதா கொங்கரா அடுத்து சூர்யவை இயக்கப் போகிறாராம்.

இப்படத்திற்கு “விக்ரம் வேதா” படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல்.