அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில், நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்குனர் பாலா. இந்த படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து, இந்த படத்தை மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கப்போவதாக, கூறி தேசிய விருது இயக்குனர் பாலாவை அவமானப்படுத்தியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் விக்ரம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த படத்தை இயக்க சம்மதித்த பாலா இறுதியில், துருவின் வருங்காலத்தை மனதில் வைத்து இந்த படத்தில் இருந்து விலகுவதாக கூறினார். ஆனால் பாலா வெளியேற்றம் குறித்து விக்ரம் அமைதி காத்தது ரசிகர்களை கோபமடைய செய்தது.

காரணம் பல படங்களில் நடித்தும், நட்சத்திர அந்தஸ்து பெறாமல் இருந்த விக்ரமுக்கு, 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து, திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பாலா. 

தற்போது, பாலாவை விக்ரம் கைவிட்டாலும், இவரால் வளர்ந்த மற்றொரு நடிகரான சூர்யா வர்மா படத்தால் ஏற்பட்ட அவமானத்தால் துவண்டிருந்த பாலாவிற்கு தோள் கொடுத்துள்ளார். 

'வர்மா' படத்தில் இருந்து விலகியதும், புதிய திரைப்படத்தை இயக்க கதை எழுதுவதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார் பாலா. தற்போது எழுதி முடிக்கப்பட்ட கதையை சூர்யாவிடம் கூற, உடனடியாக ஓகே கூறி பாலாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.