இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷாவின் கணவரான ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்துள்ள 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதால், தற்போது 'காப்பான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில், லைக்கா நிறுவனம் "காப்பான்" செப்டம்பர் 20ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்பார்த்ததை விட படம் தள்ளி போவதே ரசிகர்களின் அதிருப்திக்கு காரணம்.

இந்த படத்தில் நடிகர் மலையாள நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.