நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவருமே சிறந்த நடிகர்கள், இருவருக்குமே ரசிகர்கள் கூட்டத்திற்கு பஞ்சம் மில்லை,தற்போது பல படங்களில் தங்களது திறமைகளை மெருகேற்றி கொண்டு இருக்கின்றனர்.

சூர்யா தற்போது நடிப்பில் மட்டும் இல்லாமல், படங்களை தயாரிக்கவும் தொடங்கிவிட்டார். 

இந்நிலையில் இவர் தயாரிப்பில் வெளிவந்த 24, பசங்க-2 என இரண்டு படங்களும் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

அதே போல் மாதவன், ரித்திகா நடித்து, சுதா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று படமும் இதில் தேர்வாகியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச படவிழாவில் சூர்யா மட்டும் மாதவன் மோதுகின்றனர். 

யார் படம் இறுதியாக தேர்வாகும் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.