சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.  அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மே 29ம் தேதி அன்று ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸானது. நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஆன்லைன் தளத்தில் வெளியாகி இருந்தாலும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் ஜோதிகாவின் நடிப்பையும், அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக்கின் முதிர்ச்சியான இயக்கத்தையும் பாராட்டினார். குழந்தைகளை தங்களது பாலியல் வக்கிரங்களுக்கு பலியாக்கும் காமக்கொடூரர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முதன் முறையாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜோதிகா, கோர்ட் சீனில் வாதாடிய காட்சிகள் அனைத்தும் வேற லெவலுக்கு வரவேற்பு பெற்றது. 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

படம் வெளியான அன்று தனக்கு வாய்ப்பளித்த சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் ஜே.ஜே. ஃபெட்ரிக் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “எனது முதல் படத்தை மிகவும் மறக்கமுடியாததாக மாற்றியமைத்த உங்களுக்கும் சூர்யா சாருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”  என்று குறிப்பிட்டிருந்தார். இன்று வரை “பொன்மகள் வந்தாள்” படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் இயக்குநர் பெட்ரிக்கிற்கு அசத்தலான கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!

அந்த காஸ்ட்லி கிப்ட் மற்றும் சூர்யா, ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள பெட்ரிக், "ஜோதிகா மேம், சூர்யா சார் உங்கள் மறக்க முடியாத பரிசு பொருட்களுக்காக நன்றி. ஆனாலும் உங்களை அறிந்து கொண்டது தான் எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. உங்களது அளவு கடந்த அன்பு தான் பொன்மகள் வந்தாள் படத்தின் வெற்றிக்குக் காரணம். வார்த்தைகளால் எனது நன்றியை தெரிவிக்க முடியாது" என்றும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.