surya acting gaminiganesan character in maganathi flim
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவிருப்பது பற்றி சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் நாக்-அஸ்வின் இயக்கவிருக்கிறார் இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். நடிகை சமந்தாவும் சாவித்திரிக்கு போட்டியாக விளங்கிய ஜமுனா ராணி வேடத்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசன் வேடத்தில் நடிப்பதற்காக படக்குழுவினர் பல்வேறு கதாநாயகர்களை பரிசீலித்து வந்தனர்.
தற்போது அவர்கள் நடிகர் சூர்யாவிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் சூர்யா இணைந்தால் படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிபெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மகாநதி படத்தில் சூர்யா நடிப்பது உறுதியானால் அது கீர்த்தி சுரேஷுடன் அவர் ஜோடிசேரும் இரண்டாவது படமாக அமையும்.
