'36 வயதினிலே' படத்தை முதல் முறையாக, 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தாயாரித்து, தயாரிப்பாளராக மாறியவர் நடிகர் சூர்யா. முதல் படமே, சூப்பர் ஹிட் வெற்றியடையவே, இந்த படத்தை தொடர்ந்து, பசங்க 2 , மகளிர் மட்டும், கடைக்குட்டி சிங்கம், உறியடி 2 , என தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தயாரித்தார்.

இந்நிலையில் தற்போது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தற்போது வெற்றிகரமாக 12 ஆவது படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இந்த தகவலை 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

இந்த படத்தில் ஜாக்பார்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஜோதிகா தன்னுடைய கணவரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில், சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.