அஜித்தை ஆன்லைன் கடவுள் என்கிறார்கள்! அவரது ரசிகர்கள். ஓவர் பில்ட் அப்பாக இருந்தாலும் இதில் ஒரு லாஜிக் இருக்கத்தான் செய்கிறது. கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் அவரது மாஸ் குறைவதுமில்லை. அதேபோல் அஜித் ஆன்லைனில் வருவதில்லை ஆனாலும் அவருக்கான மாஸ் குறைவதேயில்லை. இப்ப லாஜிக் இடிக்கலையே!

ஆக்சுவலி ஃபேஸ்புக், ட்விட்டர் என எங்குமே அஜித் இல்லை. ஆனால் எல்லா இடங்களிலும் அவரைப்பற்றிய செய்திகளும், தேடல்களும், லைக்ஸும், ஆராதனை கமெண்ட்ஸும் அள்ளுகின்றன. அஜித்தை விட விஜய்யை வைத்துதான் அடிக்கடி விஷூவல் மாஸப்ஸுகள் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகின்றன. விஜய்யின் பவகையான ஆக்‌ஷன் சீன்க்ஸ், ரொமாண்டிக் சீன்ஸ், சென்டிமெண்ட் சீன்ஸ்  என்று இந்த மாஸப் கான்செப்டுகள் உருவாக்கப்படுகின்றன. 

ஆனால் இவற்றுக்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பை விட அஜித்தின் பழைய போட்டோ அல்லது சீன் ஒன்றை  அப்லோடினாலும் கூட ஆரவாரம் அள்ளிக் கொண்டு போகிறது. அதிலும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தம்பதிகளாக இருக்கும் போட்டோக்களை போட்டால் பிய்ச்சுக் கொள்கிறது ஷேரிங். அதே நேரத்தில் அஜித்தை அண்ணன் என்றும், ஷாலினியை அண்ணி என்றும் அரதப்பழைய மொக்கை சென் டிமெண்ட் சொல்லியெல்லாம் யாரும் விளிப்பதில்லை. தல மற்றும் தலயின் குடும்பம் என்கிற நாகரிகத்தோடு நின்று விடுகிறார்கள். இது அஜித் சொல்லாமலே அவரது ரசிகர்கள் இட்டுக் கொண்ட நாகரிக எல்லைக்கோடுகள். 

பொழப்பில்லாத ஒரு ஆன்லைன் சர்வே ஒன்று சொல்கிறது...தமிழகத்தை பொறுத்தவரையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அஜித்தின் ரசிகர்கள். 

அஜித்தை பாராட்டி எழுதினால் லைக்ஸும், ரீ ட்விட்ஸும் பறக்கிறது என்கிறது அந்த சர்வே. அஜித்தை பற்றி புதுப்புது அல்லது ஹாட் தகவல்களை தருபவர்களுக்கு ஃபாலோயர்களும் பெருகுவார்கள். ஆன்லைனில் பிரபலமாக வேண்டுமென்றால் அஜித்தை பற்றி பதிவிடுங்கள்!...என்று பாடமே நடத்துகிறது ஒரு கூட்டம். 

இப்படி பல்கிப் பெருகும் கூட்டம்தான் அஜித்தின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர், சிங்கிள் டிராக், ஜூக் பாக்ஸ் என எது வந்தாலும் மைக்ரோ செகண்டுகளுக்குள் லைக்ஸை அள்ளிக்கொட்டி அவரது புகழை அந்தரத்தில் கொண்டுபோய் வைக்கிறது. இது போக அஜித்தை விரும்பும் மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் எக்கச்சக்கமாக இருக்கிறார்கள். இவர்களும் அவரது புதுப்படத்தின் ஒவ்வொரு டைமன்ஸனையும் லைக்கிக் கொண்டே இருக்கிறார்கள். 

பொதுவாக மற்ற ஹீரோக்களை பற்றி வெளிப்படையான கருத்தை தெரிவிக்கவோ அல்லது ஆன்லைனுக்கான பேட்டி கொடுக்கவோ ஆர்வம் காட்டாத இயக்குநர்கள், செலிபிரெட்டிகளுக்கு மத்தியில் அஜித்தை பற்றி மட்டும் போட்டிபோட்டுக் கொண்டு பேட்டி தட்டுகிறார்கள். 

இப்படி அத்தனை பேரும் தாங்கிப்பிடிக்க படத்துக்குப் படம் உச்சம் தொட்டுக் கொண்டே இருக்கிறார் தல. ஆனால் இதற்கு கைமாறாக அவர் எல்லோருக்கும் கொடுப்பது தனக்கிருக்கும் நட்சத்திர அந்தஸ்தை சொந்த வளர்ச்சிக்கோ அல்லது அரசியல் முயற்சிக்கோ பயன்படுத்தாத செயல்தான். 

அதையும் தாண்டி மனித நேயத்துடன் அவர் செய்யும் கணக்குவழக்கில்லாத உதவிகள்தான் அவரை நோக்கி புதுபுது ரசிகபட்டாளத்தை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.