Suriya TSK Pre Release event at Chennai
தானா சேர்ந்த கூட்டம் பட விழாவில் ரசிகர்களின் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக நாளை வெளியாகவிருக்கும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரசிகர்களின் காலில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சூர்யா.

சிங்கம் மூன்றாம் பாகத்திற்குப்பின் வெளியாகவிருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் பரபரபாக இயங்கி வருகிறார். இந்தப் படம் தெலுங்கிலும் நாளை வெளிவரவிருப்பதால் அங்கு ரசிகர்களை சந்தித்த சூர்யா, அதன் பின்னர் மலையாள ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் மேடையிலேயே நடனமாடி அசத்தினார்.

இந்நிலையில், நேற்று மாலை சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் இப்படத்தின் புரொமோஷன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பின்னணி இசை வேலைகளால் பிசியாக இருந்த அனிருத் தற்போது அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அசத்தினார். இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுடன் ஆட சில ரசிகர்களை அழைத்தார் தொகுப்பாளினி அஞ்சனா. அப்போது வந்த ஐந்தாறு ரசிகர்கள் மேடை ஏறியதும், சூர்யாவின் காலில் விழுந்து வணங்கினர். இதனால் அதிர்ச்சியான சூர்யா மீண்டும் அவர்களது கால்களில் விழுந்தார். சூர்யா தனது ரசிகர்களின் காலில் விழுந்ததால் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அசத்தினர்.
சூர்யாவும் கால்ல விழுந்து வணங்குறாப்ல😍❤️ #TSKPreReleaseEventpic.twitter.com/wYLZlFpJDB
— N (@Sakaavu) 11 January 2018
காலம் காலமாக அரசியல், சினிமா என பெரும்பாலான துறைகளில் காலில் விழும் கலாச்சாரம் இருந்து வருவதால் இதை விரும்பாத சூர்யா, காலில் விழும் கலாச்சரத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
