எதற்கும் துணிந்தவன் (etharkkum thunindhavan) படத்தில் இருந்து ஈர்க்கவே அனிருத்தும், ஜிவி பிரகாஷும் முதன்முறையாக இணைந்து பாடிய ‘வாடா தம்பி’ (vaada thambi) பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான உள்ளம் உருகுதய்யா (Ullam Uruguthaiya) பாடல் வெளியாகியுள்ளது. 

எதற்கும் துணிந்தவன் (etharkkum thunindhavan) படத்தில் இருந்து ஈர்க்கவே அனிருத்தும், ஜிவி பிரகாஷும் முதன்முறையாக இணைந்து பாடிய ‘வாடா தம்பி’ (vaada thambi) பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான உள்ளம் உருகுதய்யா (Ullam Uruguthaiya) பாடல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'டாக்டர்' பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ரொமான்டிக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. உள்ளம் உருகுதய்யா என துவங்கும் இந்த பாடலில் விதவிதமான கெட்டப்பில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் தோன்றி ரொமான்ஸ் செய்துள்ளனர். முருகர், மன்னன், ஜோதா - அக்பர் என... காதல் பொங்க இந்த பாடல் உருவாகியுள்ளது. தற்போது இந்த பாடல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.YouTube video player