கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் இவர் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய திரைப்படங்களுக்கு ஆந்திராவில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தன. 

இந்நிலையில், சூர்யா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் திரைப்படத்தை தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். அதுவும் சுமார் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். இன்று காலை அப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டினாரா ரஜினி?- முதல் ஆளாக ஜெயிலர் படம் பார்த்து விமர்சனம் சொன்ன அனிருத்

Scroll to load tweet…

இதில் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகின. புது படத்தை கொண்டாடுவது போல் தியேட்டரில் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. அதுவும் குறிப்பாக அஞ்சல பாடலுக்கு வேறலெவலுக்கு வைப் ஆன ரசிகர்கள் தியேட்டர் ஸ்கிரீன் முன் கும்பலாக சேர்ந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆந்திராவில் இப்படி ஒரு மவுசா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

Scroll to load tweet…

பொதுவாகவே கவுதம் மேனன் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் போது வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். இதற்கு முன் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கின்றன. அந்த வரிசையில் வாரணம் ஆயிரம் படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆன சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் திரைப்படமும் இணையும் போல தெரிகிறது. 

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... புது லுக்கிற்கு மாறிய ரஜினி.. தலைவர் 170 படத்தில் நானி முதல் பகத் பாசில் வரை இத்தனை பிரபலங்கள் நடிக்கிறார்களா?