Suriya : விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் செம்ம மாஸாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது பாலா இயக்கும் சூர்யா 41 படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சிறப்பு பயிற்சியும் பெற்று வருகிறார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையடுத்து சிறுத்தை சிவா, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ள சூர்யா, அண்மையில் ரிலீசான விக்ரம் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதில் அவர் நடித்திருந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் செம்ம மாஸாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

படத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மனதில் பதியும் ஒரு கதாபாத்திரமாக அது இருந்தது. இந்நிலையில், ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சூர்யா சம்பளமே வாங்கவில்லை என்கிற தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Jawan : ஜவானும் காப்பியா... பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லீ - பொளந்துகட்டும் நெட்டிசன்கள்