Jawan : ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் இயக்கத்தில் முதலாவதாக வெளியான ராஜா ராணி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இயக்குனர் அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அதன்படி பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குனர் அட்லீ முதல் படத்தில் இருந்தே காப்பி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் மணிரத்னத்தின் மவுன ராகத்தை ஒத்து இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படம் போல் இருந்ததாகவும் கூறப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து காப்பி சர்ச்சையில் சிக்கி வரும் அட்லீ, தற்போது ஜவான் படத்திலும் அவ்வாறு மாட்டி உள்ளார்.

ஜவான் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஷாருக்கான முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி காட்சியளித்தார். இது கடந்த 1990-ம் ஆண்டு வெளியான டார்க் மேன் எனும் ஹாலிவுட் படத்தின் தோற்றத்தை ஒத்து இருப்பதாக கூறி நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். டீசருக்கே இந்த நிலைமை என்றால் படம் ரிலீசானால் என்னென்ன செய்யப்போகிறார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்... Suzhal : ரிலீசுக்கு தயாரானது விக்ரம் வேதா இயக்குனர்களின் புது வெப் தொடர் - 30 மொழிகளில் வெளியாகிறது