Asianet News TamilAsianet News Tamil

suriya : 5 மொழிகளில் சரவெடியாய் வெடிக்க தயாராகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ - வந்தாச்சு மாஸ் அப்டேட்

எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

suriya Etharkkum Thunindhavan released as pan india movie
Author
Tamil Nadu, First Published Dec 13, 2021, 9:15 PM IST

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

suriya Etharkkum Thunindhavan released as pan india movie

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

suriya Etharkkum Thunindhavan released as pan india movie

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் இப்படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம். சூர்யா நடித்த படம் ஒன்று பான் இந்தியா படமாக வெளியாவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios