இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வரும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை பார்த்து விட்டு, நடிகர் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வரும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை பார்த்து விட்டு, நடிகர் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் ஆர்யாவின் உழைப்புக்கு கை மேல் பலன் கொடுக்கும் விதமாக 'சார்பட்டா' படத்தின் வெற்றி அமைந்துள்ளது. அதே போல் இந்த படத்தில் நடித்துள்ள, ஜான் விஜய், ஜான் கோகென், துஷாரா, ஷபீர், காளி வெங்கட் என அனைத்து நடிகர்களும் தங்களுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். சுமார் 24 கொடியே 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இந்த படத்தின் லாபம் மட்டுமே 20 கோடி என்றும் கூறப்படுகிறது.

ஆர்யா ஒவ்வொரு கட்டத்திற்கும், சூழ்நிலைக்கும், ஏற்ற போல் தன்னை வேறு படுத்தி நடித்து வியக்க வைத்துள்ளார். மொத்தத்தில் காதல், எமோஷன், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த... ஒரு ஸ்போர்ட்ஸ் பீரியட் மூவியாக இந்த படத்தை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். நாளுக்கு நாள் இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் புகழ்கிறார்கள் என்றால் மற்றோர் புறம் பிரபலங்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சூர்யா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது... "சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! " என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இவரை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது... "சார்பட்டா பரம்பரை இந்த படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமைப்பட வேண்டிய படைப்பு. கை தட்டி வரவேற்க வேண்டும். அற்புதமான படைப்பு பார்க்க தவறாதீர்கள் என கூறியுள்ளார். 

Scroll to load tweet…