Lokesh kanagaraj : மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளதோடு தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, விஜே மகேஸ்வரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கதை உள்பட ஏராளமான சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி விக்ரம் படத்தில் நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரின் வரவு படத்தின் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நெல்சன் படத்தில் நடிக்கும் முன் ‘தலைவர் 170’ பட இயக்குனரை புக் செய்த ரஜினி... இது சர்ப்ரைஸ் கூட்டணியா இருக்கே!