Sudha kongara: சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில், அஜித் மற்றும் சூர்யா இணைத்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில், அஜித் மற்றும் சூர்யா இணைத்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா:

சுதா கொங்கரா இவர், இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று வெற்றிக்கு பிறகு, தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக வலம் வருகிறார். இவர், இதையடுத்து சூர்யாவுடன் அடுத்ததாக கூட்டணி வைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்:
சூரரைப் போற்று வெற்றிக்கு பின் ஹிந்தி ரீமேக் இயக்குவதற்கும் ஒப்பந்தமானர் சுதா கொங்கரா. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கி உள்ளது. சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.

அஜித் மற்றும் சூர்யா கூட்டணி:
இது ஒரு புறம் இருக்க, சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில், அஜித் மற்றும் சூர்யா இணைத்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’, பிரபாஸின் ‘சலார்’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹோம்பல் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது.

மேலும், அஜித் சூர்யா இணையும் இந்த புதுப்படத்தை சூர்யாவே தன்னுடைய 2டி நிறுவனத்தில் தயாரிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21 ஆண்டுகள் கழித்து சூர்யா -பாலா கூட்டணி:
சூர்யா தற்போது இயக்குனர் பாலா உடன் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். 21 ஆண்டுகள் கழித்து சூர்யா -பாலா கூட்டணி வைத்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயுத பூஜை விடுமுறை சமயத்தில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, அஜித் வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில், உருவாகும் AK61 படத்தின் பிஸியான நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
