Suriya 43 Update : நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பயங்கர பிஸியாக இருந்து வரும் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் உருவாக உள்ள அடுத்த திரைப்படம் தான் சூர்யா 43.

தற்பொழுது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது "கங்குவா" திரைப்பட பணிகளை விரைவில் முடிக்க உள்ள நடிகர் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் "வாடிவாசல்" திரைப்படத்திலும் சுதா கொங்கார இயக்கத்தில் உருவாகியுள்ள அவருடைய 43 வது திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். 

ஏற்கனவே சுதா கொங்கார இயக்கத்தில் "சூரரைப் போற்று" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் 43 வது திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தான் இசையமைத்து வருகிறார், அவர் இப்பொது இந்த படத்திற்கான பாடல் அமைக்கும் பணிகளை துவங்கி உள்ளதாக கூறியுள்ளார்.

"சாரே கொல மாஸ்".. வெளியானது G.O.A.T Second Look Poster.. தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் வெங்கட் பிரபு! 

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சூர்யா 43 படத்திற்கான ரெகார்டிங் பணிகள் துவங்கிவிட்டது, இந்த படத்தின் முதல் பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுடைய மகள் பிரபல பாடகி DHEE அவர்களுடைய குரலில் ஒளிப்பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாடகி மற்றும் இயக்குனர் சுதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

கங்குவா படப்பிடிப்பின் போது சூர்யா அவர்களுடைய கால்களில் காயங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு மீண்டும் கங்குவா திரைப்பட பணிகளை தொடர்ந்துள்ள சூர்யா, விரைவில் அந்த பாடப் பணிகளை முடித்துவிட்டு சுதா மற்றும் வெற்றிமாறனின் படங்களில் நடிக்க துவங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.