சூர்யாவின் இந்த படத்தில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைமில் வெளியான படத்தை பார்த்து பாலிவுட் முதல் கோலிவுட் வரை சூர்யாவின் நடிப்பை பாராட்டதவர்களே இல்லை எனக்கூறலாம். அப்படி வசூல், விமர்சன ரீதியாக புகழ் பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஆஸ்கர் ரேஸில் குதித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். 

தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் 40வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பாண்டிசூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என மாபெரும் வெற்றி படத்தை தந்த இயக்குனர் பாண்டிராஜ், இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்தி குறித்து பாண்டிராஜ் ட்விட் செய்துள்ளார். 

சூர்யாவின் இந்த படத்தில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா 5 கெட்டப்புக்களில் நடிப்பதாகவும், அதில் ஒன்று தமிழக முதலமைச்சர் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ள இயக்குநர் பாண்டிராஜ் இன்று படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…