இன்று மாலை சூர்யா-வின் 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாஸான கெட்டப்பில் சூர்யா நடித்துள்ள இந்த படத்தின் ஃபாஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளான இன்று, ரசிகர்கள் சந்தோஷத்தில் திணறடிக்கும் அளவுக்கு பல அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இன்று மாலை சூர்யா-வின் 39 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாஸான கெட்டப்பில் சூர்யா நடித்துள்ள இந்த படத்தின் ஃபாஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூர்யாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டாலும், அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபி வெளியிட்டு கொண்டாட துவங்கி விட்டனர். மேலும் நேற்றைய தினம், சரியாக மாலை 6 மணிக்கு, சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் 'எதற்கும் துணிந்தவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், 12 மணிக்கு செகண்ட் லுக் மற்றும், இன்று மதியம் மூன்றாவது லுக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகியது.

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, 39 ஆவது படத்தின் படக்குழு அறிவித்திருந்தது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சூர்யா செம்ம மாஸாக வக்கீல் கெட்அப்பில் தோன்றியுள்ள போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் பெயர் 'ஜெய்பீம்' என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில்... பழங்குடியின மக்கள் நின்று கொண்டிப்பது உள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில்... பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடு ஒரு வக்கீலாக சூர்யா நடித்துள்ளார் என்பது தெரிகிறது.

இந்த படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், 'கர்ணன்' பட நாயகி ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…