இந்தப் படத்தை தொடர்ந்து, 'தல' அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிவா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இது, அவர் நடிக்கும் 168-வது படம் என்பதால், தற்போதைக்கு 'தலைவர் 168' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இந்தப் படத்தை, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'எந்திரன்', 'பேட்ட' படங்களின் மெகா ஹிட்டை தொடர்ந்து, ரஜினிகாந்த் -கலாநிதி மாறன் கூட்டணி சேர்ந்திருக்கும் 3-வது படம் இது.  'தலைவர் 168' படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 

சூப்பர் ஸ்டாரின் படத்திற்கு அவர் இசையமைப்பது இதுதான் முதல்முறையாகும். இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கும் படக்குழு, தற்போது நடிகர், நடிகையர் தேர்வில் மும்முரமாக உள்ளது.

இந்த நிலையில், 'தலைவர் 168'  படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க பிரபல காமெடி நடிகர் சூரி கமிட்டாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1200029069192105989

சாதாரணமாகவே காமெடியில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டாருடன்  முதல்முறையாக சூரி இணைந்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இதனால், 'தலைவர் 168' படத்தில் ரஜினி - சூரி காம்போவிடமிருந்து சரவெடி காமெடிகள் வெடித்துச் சிதறும் என எதிர்பார்க்கப்படுகிறது.