பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்கள் பட்டியலில் இருந்த சுரேஷ், இரண்டு வாரங்களாக அமைதியானதால்... இவர் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி இவரை வெளியேற்றும் நிலைக்கு கொண்டு சென்றது.

பிக்பாஸ் வீட்டில் சாப்பிடவும், தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத ஒருசில போட்டியாளர்கள் இன்னும் இருக்கும் மத்தியில் கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் வெளியேறியது பார்பவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தாலும், மீண்டும் இவர் வயல் கார்டாக ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்கிற ஆசையையும் பலர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சுரேஷ் சமூக வலைத்தளம் மூலம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன? என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார். நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை என்று கூறி வந்த நிஷாவிற்கு கமலின் பேச்சு சாட்டையடியாகவே பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நிஷா குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ’நிஷா.. வேஷம்’ என்று கூறியுள்ளார். வெளியில் கலகலப்பாக பார்த்த நிஷா எங்கு சென்றார் என பலரும் தேடி கொண்டிருக்கும் நிலையில், ஒற்றை வார்த்தையில் நிஷாவை பற்றி துல்லியமாக கனிந்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தியை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.