MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனத்தை மட்டந்தட்டி அவமானப்படுத்திய சந்திரகலா; கார்த்திகை தீபம் ரணகளம்!

வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனத்தை மட்டந்தட்டி அவமானப்படுத்திய சந்திரகலா; கார்த்திகை தீபம் ரணகளம்!

Karthigai Deepam Serial Highlights Chandrakala Insults Mayilvaganam : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் காதலர் தினம் கொண்டாடிய நிலையில் வழக்கம் போல் சாமுண்டீஸ்வரி இருவரையும் பிரிக்க திட்டமிட்டுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 18 2026, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Karthigai Deepam serial latest twist
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam serial latest twist

கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் காதலர் தினம் கொண்டாடினர். ரேவதிக்கு பரிசு மேல் பரிசு கொடுத்து கார்த்திக் அசத்தினார். இந்த நிலையில் தான் 1125ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் காதலர் தினம் கொண்டாடிய நிலையில் மயில்வாகனம் மற்றும் ரோகிணி இருவரும் காதலர் தினம் கொண்டாடினர். இதில் கையில் ரோஜாப்பூவை எடுத்துக் கொண்டு ரோகிணிக்கு எல்லோர் முன்னிலையிலும் மயில்வாகனம் தனது காதலை புரபோஸ் செய்தார்.

26
Mayilvaganam Karthigai Deepam serial
Image Credit : Zee Tamil You Tube

Mayilvaganam Karthigai Deepam serial

அதற்கு முன்னதாக ரோகிணி காதலிப்பவர்கள் தான் காதலை வெளிப்படுத்த வேண்டும். நமக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் நாம் கொண்டாட தேவையில்லை என்றார். அப்படியிருந்தாலும் மயில்வாகனம் விடுவதாக இல்லை. ரோகிணிக்கு ரோஸ் கொடுத்து அசத்தினார். இதே போன்று ராஜராஜனையும் காதலை வெளிப்படுத்த செய்தனர்.

36
வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனம்
Image Credit : Zee Tamil You Tube

வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனம்

அவரும் கையில் ரோஸ் எடுத்துக் கொண்டு சாமுண்டீஸ்வரிக்கு புரபோஸ் செய்ய சென்றார். ஆனால், கடும் கோபத்திலிருந்த சாமுண்டீஸ்வரி அந்த ரோகாப்பூவை கையில் பிடுங்கி தூக்கி எறிந்தார். இருவரும் காதலர் தினம் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்தனர். அப்போது சாமுண்டீஸ்வரி ரேவதி எங்க போன, நீ பண்ணுவது கொஞ்சம் கூட சரியில்லை. இன்னும் 6 மாசத்தில் உனக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறது என்றார். அதற்கு நீ கட்டாயப்படுத்தியதால் தான் நான் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டேன். அதோடு, கோர்ட் எங்களுக்கு 6 மாசம் டைம் கொடுத்திருக்கிறது. 

46
கார்த்திகை தீபம் சீரியல் லேட்டஸ்ட் ட்விஸ்ட்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் சீரியல் லேட்டஸ்ட் ட்விஸ்ட்

அதுவரையில் நாங்கள் இருவரும் புருஷன் பொண்டாட்டி தான் என்றார். இதே போன்று தான் கார்த்திக்கும், புருஷன் பொண்டாட்டி விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீங்க என்றார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சந்திரகலாவை மயில்வாகனம் கொஞ்சம் சீண்டிப் பார்த்தார். சின்ன அத்தை நீங்கள் உங்களது வேலையை மறந்து விடாதீங்க, இன்று 2ஆவது நாள், நீங்கள் கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரகலா எதுவும் பேசாமல், தனது வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்தார்.

56
சந்திரகலா மயில்வாகனம் மோதல்
Image Credit : Zee Tamil You Tube

சந்திரகலா மயில்வாகனம் மோதல்

அப்போது சாமூண்டீஸ்வரி, மயில்வாகனம், ரோகிணி, ராஜராஜன், சுவாதி என்று அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சந்திரகலா வருவதை பார்த்த சாமுண்டீஸ்வரி, அவரை சாப்பிட அழைத்தார். ஆனால், அவர் பசியில்லை என்று சொல்லவே, மயில்வாகனம், அவருக்கு இருக்கும் உடம்புவலிக்கு இப்போது ரெஸ்ட் தான் வேண்டும் என்றார். இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற சந்திரகலா, மயில்வாகனத்தை எந்தளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தினார்.

66
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

தனது கணவரை அசிப்படுத்துவதை பார்க்க முடியாமல் ரோகிணி சந்திரகலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எதுவும், பேசாமல் அமைதியாகவே இருந்த மயில்வாகனம் சாப்பிடாமல் பாதியிலேயே கையை கழுவிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் 1125ஆவது எபிசோடு முடிந்தது. இனி, அடுத்த எபிசோடில் மயில்வாகனம் என்ன செய்கிறார்? வேலைக்கு செல்ல முடிவு செய்கிறாரா? இல்லையா என்பது பற்றி பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாரிஜாதம் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோ... காரணம் என்ன தெரியுமா?
Recommended image2
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved