surchi leeks dhanush sister replay for the issue

பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் தனுஷ், அனிருத், சஞ்சிதா ஷெட்டி போன்றோர் புகைப்படங்கள் மிக வைரலாக பரவியது.

தற்போது சுசித்ராவின் இத்தகைய செயலுக்கு தனுஷின் சகோதரி விமலா கீதா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்கவும் முடிவெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்....

கடந்த சில மாதங்களாக எங்கள் குடும்பத்திற்கு வரும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, மிகவும் மனம் நொந்து போயுள்ளோம். இருப்பினும் நாங்கள் அமைதி காத்து வருகிறோம். தனுஷ் தியாகங்கள் செய்து தான் எங்களுக்கு இத்தகைய வாழ்க்கையை கொடுத்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த நாங்கள்,கடும் உழைப்பின் காரணமாகத்தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். தேனியின் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்து, ஒரே இரவில் நாங்கள் பெரிய ஆட்கள் ஆகிவிடவில்லை. என்னுடைய சகோதரன் தனுஷ், இது போன்ற எத்தனையோ அவதூறுகளை சந்தித்துதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளான்.

ஒரு பிரபலத்தின் பெயரை கெடுக்க இப்படி ஆபாச படங்களை வெளியிடுகிறார்கள் என்பதை விட, மக்கள் அதை ஆர்வமுடன் பார்க்கிறார்கள், இன்னும் வெளியிடுங்கள் என அவரிடம் கேட்பது தான் வருத்தமாக இருக்கிறது. எது நடந்தாலும் நாங்கள் ஒன்றாக இந்த பிரச்னையை எதிர்கொள்வோம்.

வருத்தத்துடன் என்னுடைய பேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக மூடுகிறேன். யார் இந்த காரியங்களையெல்லாம் செய்கிறார்களோ..அவர்கள் எல்லாம் இதோடு நிறுத்தி கொள்ளுங்கள். வாழுங்கள் வாழவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.