கந்து வட்டி கேட்டு, ரயில்வே ஊழியரின் இருசக்கர வாகனத்தை கடத்தி, அவரை அடித்து உதைத்து துன்புறுத்திய துணை நடிகரும், பிரபல நடிகரின் மருமகனுமான ஜெரால்டு மில்டன் உட்பட, 3 பேரை போலீசார் வலைவீசு தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அக்கா ஷாலினியுடன் சேர்ந்து அஜித் மச்சினிச்சி ஷாமிலி எடுத்து கொண்ட போட்டோஸ்..! அதிகம் பார்த்திடாத புகைப்படங்கள்!
 

துணை நடிகராக ஒரு சில படங்களில் பணியாற்றி வரும், நடிகர் ஜெரால்டு மில்டன், மறைந்த பிரபல நடிகரும், மேஜிக் கலைஞருமான அலெஸ்சின் மருமகன் ஆவர். மேலும்  நடிகர் சங்க  தேர்தலின்போது விஷாலின் பாண்டவர் அணியில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், மறைந்த நடிகர் அலெக்ஸ், அதாவது ஜெரால்டு மில்டனின் மாமனார்... திரையுலகில் அறிமுகம் ஆகாத காலத்தில், திருச்சி ரயில்வே ஊழியர்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்துக் கொண்டிருந்தார். பின்னாளில் மேஜிக் கலைஞராக மாறினார். சினிமாவிலும் நடித்து புகழ் பெற்று மறைந்தார். 

மேலும் செய்திகள்: தாய்மையின் பேரழகு... நிறைமாத வயிற்றுடன் மைனா நந்தினி நடத்திய Pregnancy போட்டோ ஷூட்...!
 

இந்நிலையில் தன்னுடைய மாமனார் போலவே திருச்சியில் ரயில்வே தொழிலாளர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வருகிறார் ஜெரால்டு. அரசியல் கட்சியிலும் சேர்ந்து திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும்  திரையுலகில், தனக்கு நன்கு அறிமுகமானவர்கள் மூலம் ஒரு சில பங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கந்து வட்டி கேட்டு ஜெரால்டு மிரட்டியதாக கடந்த 2012 ஒருவர் தற்கொலை செய்து கொண்ட, சம்பவத்தில் இருந்து சமீபத்தில் தான் சிறையில் இருந்து இவர் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருச்சியை சேர்ந்த 56 வயதான ரயில்வே ஊழியர் ஆறுமுகம் என்பவர்,பொன்மலை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

மேலும் செய்திகள்: இயக்குனர் செல்வராகவனின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்..
 

இந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 29 ஆம் தேதி (சனி கிழமை) அன்று வேலை முடிந்து வந்த தன்னை 3 பேர் பலமாக தாக்கி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தை கடத்தி சென்றதாகவும். கடந்த ஆண்டு ஜெரால்டுயிடம் வாங்கிய 35 ஆயிரம் ரூபாய்க்கான வட்டியை சரியான முறையில் செலுத்தி வந்தேன். ஆனால் கொரோனா நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. இதனை காரணமாக வைத்து, 1 லட்சம் கேட்டு மிரட்டுவதாக, தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

மேலும் தன்னை ஜெரால்டுடன் சேர்ந்து தாக்கிய, அவருடைய கூட்டாளிகள் ஜெஸ்டின் ஜெபராஜ் மற்றும் விசு ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என, தன்னுடைய புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரில் அடிப்படையில் போலீசார் 3 போரையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.