காலா படப் பிடிப்பிற்கு பிறகு மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க இருக்கிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த மே மாதம் கிட்டத்தட்ட 15 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

அப்போது அரசியல் குறித்து அவர் பேசியது தமிழக அரசியலில் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது காலா படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ரஜினி, படப்பிடிப்பு முடிந்த பிறகு வரும் செப்டம்பர் மாதத்தின் 2-வது வாரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.

இதுகுறித்து, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியது: “ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார். ஆனால், சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.