ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானில் இருந்து பறந்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள்
ஜெயிலர் படத்தை தமிழ்நாட்டு ரசிகர்களோடு பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளதால் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அப்படத்தை அதகளமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர் முன் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவும் ஜப்பான் நாட்டில் ரஜினிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தன்னுடைய மனைவி உடன் சென்னைக்கு வந்து ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை தமிழ்நாட்டு ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... விஜய் படத்தால் சறுக்கிய நெல்சன் ரஜினி படத்தில் உயர்ந்து நிற்கிறாரா?... ஜெயிலர் ரிசல்ட் என்ன?
அப்போது பேட்டி அளித்த அவர், இங்கு நான் தான் கிங்கு, நான் வச்சது தான் ரூல்ஸ் என ஜெயிலர் படத்தில் ரஜினி பேசிய டயலாக்கை பேசி அசத்தினார். ஜெயிலர் படம் பார்க்க ஒரு வாரம் முன்னரே சென்னை வந்த அந்த ரசிகரையும், அவரது மனைவியையும் தனது வீட்டிற்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவர்களுடன் பேசினார். மேலும் அவர் கொடுத்த பரிசையும் அன்போடு பெற்றுக்கொண்டார்.
ரஜினிக்கு ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானதற்கு காரணம் முத்து படம் தான். அப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அப்படம் 1998- ஆண்டே ஜப்பானில் மட்டும் ரூ.23.5 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. அப்படத்திற்கு பின்னர் ரஜினி நடிக்கும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் மொழி பெயர்ப்பு செய்து ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரோகிணி தியேட்டரில் 'ஜெயிலர்' கேக் கட் பண்ணி FDFS காட்சியை ரசிகர்களுடன் கண்டுகளித்த ரஜினி குடும்பம்! போட்டோஸ்.!