சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாலும், நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாலும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

இன்று, இந்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதை காலையில் இருந்தே ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். #DarbarTrailerFromToday என்கிற ஹாஷ்டாக் மூலம் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைவரின் தர்பார் பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதில் எப்போதும் சூப்பர் ஸ்டார் அவருடைய ஸ்டைலில் பேசும் டயலொக், நயன்தாராவுடன் ரொமான்ஸ், அதிரடி ஆக்ஷன் காட்சி, பஞ்சு வசனம் என பின்னி பெடல் எடுத்துள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர், டீசர், மற்றும் சும்மா கிழி சிங்கிள் பாடல் ஆகியவை ரசிகர்களால் வெறித்தனமாக ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள, ட்ரைலர் முந்தய படங்களின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.தர்பார் திரைப்படம் இந்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலர் இதோ..