Asianet News TamilAsianet News Tamil

HBDSuperstar :சிவாஜி to சூப்பர் ஸ்டார்.. பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார்.மீண்டும் 90களின் வெற்றியை பெறுவாரா?

Superstar Rajinikanth birthday special :இன்று தனது  71 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களின் இனி வரும் படங்கள் பழைய வெற்றியை ஈட்டி தர வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Superstar Rajinikanth birthday special
Author
Chennai, First Published Dec 12, 2021, 8:16 AM IST

சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த், 1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். சிறிய ரோலில் நடிக்க துவங்கி, வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். 

ரஜினி முதல் முதலில் கன்னட படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். மூன்று சிறுகதைகள் அடிப்படையாகக் கொண்ட கதா சங்கமம் என்னும் படத்தில் "Puttanna Kanagal" என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தில் கல்யாண் குமார், ரஜினிகாந்த் , பி. சரோஜாதேவி , ஆரத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இதன்பிறகு 1976-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய "அந்துலேனி கதா" என்னும் தெலுங்கு மொழித் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அதோடு இதில் கமல்ஹாசன்  சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்னாளில் இந்த படம் தமிழில் அவள் ஒரு தொடர்கதை  என்னும் பெயரில் வெளியானது.

Superstar Rajinikanth birthday special

பின்னர் மூன்று முடிச்சு, பாலு ஜீனு, அவர்கள்,கவிக்குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சிலாக்கம்மா செப்பண்டி,சிலாக்கம்மா செப்பண்டி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 26 படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினி இறுதியாக தந்து 27 வது படமாக 1978-ம் ஆண்டு எம். பாஸ்கர் இயக்கத்தில் வெளியான 'பைரவி' என்னும் படத்தின் மூலம்  ரஜினிகாந்த் தமிழில்  ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து  அதே வருடம் அவர் நடித்த முள்ளும் மலரும் படம் ரஜினிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது. 80 களில் நடிகர்களில் ஒருவராக இருந்த ரஜினி 90களின் முற்பகுதியில் முன்னனி நடிகராக மிளிர துவங்கினார். அப்போது வெளியான பணக்காரன், அதிசயபிறவி, தர்மதுரை, தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன் எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என அடுத்தடுத்து வெளியான ரஜினி படங்கள் 100நாட்களை கடந்து வெற்றி சிகரத்தை தொட்டது. இவருக்கென அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

Superstar Rajinikanth birthday special

அதோடு ரஜிக்கென அமைக்கப்படும் நாயகன் அறிமுக பாடல் தத்துவப்பாடல், ஒரு  சோகப்பாடல் என கட்டயாம் அனைத்து படங்களிலும் வைக்கப்படும் பாடல்கள் இன்றளவும் பிரபலம். மோட்டிவேஷன் என்றாலே ரஜினி சாங்ஸ் தான் என்னும் அளவிற்கு மனதை வருடும் பாடல்களை அவை.

90 களில் கொடி கட்டி பரந்த ரஜினியின் படங்கள் 2000த்தில் போதுமான வரவேற்பை பெறவில்லை அப்போது வெளியான பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன் உள்ளிட்டவை போதுமான வெற்றியை பெறவில்லை.

Superstar Rajinikanth birthday special

பின்னர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் ஓரளவு வரவேற்பை பெற்றது. ரஜினியை புதிய கோணத்தில் இயக்குனர் ஷங்கர் காட்டியிருப்பார். பின்னர் வெளியான கபாலி, காலா,  2.0, அண்ணாத்தா உள்ளிட்ட படங்களும் 90 களின் வெற்றியை பெற்றுக்கொடுக்கவில்லை. இதற்கிடையே 80 களின் இறுதியில் இருந்து எழுந்து வந்த அரசியல் நுழைவுக்கான குழப்பத்திற்கும் இந்த வருடத்தில் ஒரு முடிவு கட்டிய ரஜினி, தான் நடிகனாக இருக்கவே விரும்புவதாக அறிவித்துவிட்டார்.

Superstar Rajinikanth birthday special

இன்று தனது  71 வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர்ஸ்டார் அவர்களின் இனி வரும் படங்கள் பழைய வெற்றியை ஈட்டி தர வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios