Nayanthara Wedding : நயன்தாரா திருமணத்தில் கெத்தாக எண்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Nayanthara Vignesh Shivan wedding : விக்கி - நயன் திருமணத்திl 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒவ்வொருவராக மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Superstar rajinikanth attend actress Nayanthara's Grand wedding

நடிகை நயன்தாராவின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒவ்வொருவராக மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே நடன இயக்குனர் கலா மாஸ்டர், பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான், இசையமைப்பாளர் அனிருத்தின் பெற்றோர்கள், சரத்குமார், ராதிகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் வருகை தந்துள்ள நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

Superstar rajinikanth attend actress Nayanthara's Grand wedding

வெள்ளை நிற ஜிப்பா அணிந்துகொண்டு கெத்தாக எண்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற அவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... Nayanthara Wedding : ஹனிமூனுக்கு நோ சொன்ன நயன்தாரா... லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios