பாலிவுட் நடிகை பூஜா தட்வால் ஒரு வேலை உணவுக்கு கூட பணம் இல்லாமல் காச நோய் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகை பூஜா தட்வால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் 'வீர்காடி', 'ஹிந்துஸ்தான்', 'சிந்தூர் கி சவுகந்த்' போன்ற இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் கடந்த சில வருடங்களாக காசநோயால் பாதிக்கப்பட்ட அவரதிப் பட்டுவந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் இருப்பதை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இவர் தற்போது மிகுந்த வறுமையில் தவித்து வருகிறார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பூஜா.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே யாரிடமும் சொல்லாமல் வந்துவிட்டார்களாம். இதனை எதிர்ப்பார்க்காத பூஜா ஒருவேளை உணவுக்கும், டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் போராடி வருகிறாராம். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் இவருக்கு  அங்குள்ள சிலர் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஜோடியாக நடித்த சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக இருக்கிறாராம்.